யானையோடு உலா வரப்போகும் நிவேதா பெத்துராஜ்

வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (13:31 IST)
கும்கி  2 படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை லட்சுமி மேனன் நடிப்பில்  கடந்த 2012ல் கும்கி வெளியானது.  யானையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்பு இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.  



இந்தப் படத்தில் புதுமுகம் மதி என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாயகி மற்றும் யானையை மையமாக வைத்து நகரும் கதை என்பதால் நிவேதாவிடம் 70 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளார்கள். கதை ரொம்பவே ஈர்க்க,  நிவேதா பெத்துராஜ் ஒப்புக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்