கலக்கல் சம்மர்: அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஸ்டார் ஹீரோக்களின் படங்கள்!

வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:42 IST)
தற்போது அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் விவரம் பின்வருமாறு... 

 
பீஸ்ட், கே.ஜி.எஃப்-2 ஆகிய பெரிய படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின்  படங்கள் வெளியாகவுள்ளதாள் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் படங்கள் வெளியாகமல் இருந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் விவரம் பின்வருமாறு... 
 
1. விஜய் சேதுபதி, சம்ந்தா, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் அசோக்செல்வன் நடித்துள்ள ஹாஸ்டல் படமும் வரும் 28 ஆம் தேதி வெளியாகிறது. 
 
2. சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தை மே 13 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனமன லைக்கா திட்டமிட்டிருக்கிறது. 
 
3.  மே 20 ஆம் தேதி விஜய் சேதுபதியின் மாமனிதன், உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ஆகிய திரைப்படங்களும் வெளியாகின்றன. ஆனால், நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 5 ஆம் தேதி வெளியிடப்படலாம் எனும் பேச்சும் உள்ளது. 
 
4. மே 27 ஆம் தேதி விக்ரம் நடித்து இருக்கும் 'கோப்ரா' படத்தை வெளியிட தயாரிப்பாளர் லலித் முயற்சித்து வருகிறார். 
 
5. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் மே மாதத்தில் வெளியாகக்கூடும். 
 
6. ஜூன் 17ஆம் தேதி அருண்விஜய் நடித்து இருக்கும் 'யானை' மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருக்கும் 'வீட்ல விசேஷம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்