அஜித் 61, அஜித் 62 தெரியும், அஜித் 63, அஜித் 64 இயக்குனர்கள் யார் தெரியுமா?

புதன், 6 ஏப்ரல் 2022 (17:34 IST)
அஜித் நடிகை இருக்கும் 61வது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்பதும் அஜித் நடிக்கவிருக்கும் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயிருக்கிறார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் அஜீத் நடிக்க இருக்கும் 63 மற்றும் 64வது படத்தின் இயக்குனர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. அஜித் நடிக்கவிருக்கும் அறுபத்தி மூன்றாவது படத்தை சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார். இதனை அடுத்து அஜித் - சிவா கூட்டணி ஐந்தாவது முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 மேலும் அஜித்தின் 64வது திரைப்படத்தை ஸ்ரீகணேஷ் என்பவர் இயக்குகிறார் இவர் ஏற்கனவே 8 தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்