கல்லூரியில் தனது ஜீனியரான ரஜினி நடராஜை விஷ்ணு காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரஜினி நடராஜ் பிரபல நடிகரும், இயக்குநருமான கே.நடராஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு முன்னதாக இருவரும் 4 வருடங்கள் காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஷ்ணு தனது டுவிட்டர் பக்கத்தில், "கடவுளே! எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது. எனக்கும், ரஜினிக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.