மா ஆனந்தமயி… ரஞ்சிதாவை சீடர்கள் இப்படிதான் அழைக்க வேண்டுமாம்!

வியாழன், 27 மே 2021 (12:38 IST)
நித்யானந்தாவின் ஆசிரமங்களைக் கவனித்துக்கொள்ளும் ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமயி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாம்.

நித்யானாந்தா மீது பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கன்னட சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகி விட்டதால் அவரால் வெளிநாட்டிற்கு சென்றிருக்க முடியாது என சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அவர் கைலாசா என்ற புதிய தீவையே உருவாக்கி அங்கிருந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் நித்யானந்தாவின் ஆசிரமங்களை நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அதனால் அவரை இனிமேல் சீடர்கள் மா ஆனந்தமயி என்றுதான் அழைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்