தமிழக அரசியல் சர்வே: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட கேப்டன் விஜய்காந்த்

சனி, 27 அக்டோபர் 2018 (13:54 IST)
தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது பற்றி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அடுத்து யார் முதல்வராக பதவியேற்பார் என இந்தியா டுடோ, ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் பி.எஸ்.இ ஆகியவை இணைந்து 30 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 14, 820 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. 
 
அதன்படி
 
திமுக - ஸ்டாலின் - 41 சதவீதம்
அ.தி.மு.க. -பழனிசாமி - 10 சதவீதம்
மக்கள் நீதி மய்யம் -கமல்ஹாசன் - 8 சதவீதம்
பா.ம.க. - அன்புமணி -  7 சதவீதம்
ரஜினி மக்கள் மன்றம் - ரஜினிகாந்த் - 6 சதவீதம்
அதிமுக - பன்னீர்செல்வம் - 6 சதவீதம்
அ.ம.மு.க. - தினகரன் - 6 சதவீதம்
தே.மு.தி.க. - விஜயகாந்த் - 5 சதவீதம்
 
என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. 
 
உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார் விஜயகாந்த். அவ்வப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தொடர்கதையாகி வருகிறது. தேமுதிக கட்சி இருக்கிறதா என்றே பலருக்கு சந்தேகமாக இருக்கிறது. இதனால் அவருக்கு மக்களிடையே மவுசு குறைந்துவிட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதையே இந்த கருத்துக்கணிப்பும் கூறியிருக்கிறது. ஒரு காலத்தில் கெத்தாக இருந்த கேப்டன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது தேமுதிக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்