படம் ரெடியாகி சிலபல மாதங்களாகியும், ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில், வருகிற ஜூன் மாதம் 2ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு ஜூலை முதல் ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்த இருப்பதால், தமிழக அரசு அளித்துவரும் கேளிக்கை வரி கிடைக்காது. எனவே, ஜூலைக்குள் பல படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.