கர்ப்பமான நிலையில் கடவுளாக மாறிய நீலிமா!

சனி, 20 நவம்பர் 2021 (10:24 IST)
தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்துவங்கும் சுவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் நீலிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
 
'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' அரண்மனைகிளி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இசை வாணன் என்பாரை திருமணம் செய்துகொண்ட நீலிமாவிற்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். 
இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ள நீலிமாராணி நேற்று கார்த்திகை தீபத்திருநாளில் வித்யாசமான முறையில் கடவுளின் அருகில் கடவுளாகவே அவதரித்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்