நயன்தாராவின் பிறந்தநாள் பார்ட்டியில் சமந்தா - வைரலாகும் புகைப்படம்!

வியாழன், 18 நவம்பர் 2021 (14:53 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போதில் இருந்து அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
 
இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதகவல் அவ்வப்போது செய்திகள் வெளியாகும். திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும் நயன்தாரா பேட்டி ஒன்றில் கூறினார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தாவும் நடிக்கிறார். இந்நிலையில் இன்று தனது 37வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவுக்கு விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் மற்றும் சமந்தா கேக் வெட்டி வாழ்த்து சொன்ன புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு,  
 
அவள் வந்துவிட்டாள்
அவள் கண்டாள்
அவள் துணிந்தாள்
அவள் கனவு கண்டாள்
அவள் நிகழ்த்தினாள் மற்றும்
அவள் வென்றாள் !!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன் என வாழ்த்தியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்