மலையாளப் படத்தை ரீமேக் செய்கிறாரா கௌதம் மேனன்?

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:27 IST)
குஞ்சாக்கா போபன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான நாயாட்டு திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது.

திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த படத்தின் பெருவெற்றி  தடுக்கப்பட்டது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகி கேரளா தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தில் நடித்த குஞ்சாக்கா போபன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் நிமிஷ விஜயன் ஆகியோர் பாராட்டுகளைப் பெற்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்