நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர். நானும் ரவுடி தான் படத்தில் இருந்து நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவினாலும், நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த திட்டத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர். இருப்பினும் லிவிங் டுகேதர் பாணியில் இருவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கின்றனர்.
அந்த மரத்திற்கு அருகில் இருந்தபடியே இருவரும் செல்பி எடுத்து அதனை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், "கிறிஸ்துமஸ் மரம் செட் செய்துவிட்டோம். இனி எங்கும் கொண்டாட்டம் தான்" என நயன்தாரா தெரிவித்துள்ளார்.