பிரபல நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படத்தின் புரமோஷனே செய்ய மாட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அவர் நடிக்காத ஒரு திரைப்படத்திற்கு புரமோஷன் வீடியோவில் நடித்துள்ளார். அந்த படம் ராக்கி. வசந்த் ரவி, பாரதி ராஜா உள்பட பலர் நடித்த இந்தப் படத்தின் புரமோஷன் வீடியோ இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோவில் நயன்தாரா ரத்தம் சொட்ட சொட்ட நடித்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன
இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நடித்த படமாக இருந்தாலும் அவர் தயாரித்துள்ள படம் என்பதால் அவர் இந்த புரமோஷன் வீடியோவில் மிகவும் சிரத்தையுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது