காதலரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா! - வீடியோ!

புதன், 18 செப்டம்பர் 2019 (13:16 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். 

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. மேலும், இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலை படாமல் ஜாலியாக இருந்து வருகிறார்கள். 


 
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை கூறி வருவதோடு சீக்கிரம் இருவரும் திருமணம் செய்துகொள்ளுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.



Video Link 

https://twitter.com/NayantharaU/status/1174220506955964417

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்