நயன்தாரா ஒப்பந்தமான இரண்டு புதிய திரைப்படங்கள்.. இயக்குனர்கள் யார்?

வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (09:42 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஷாருக்கானின் ஜவான் மற்றும் அகமது இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவியின் இறைவன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 
 
இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் இரண்டு புதிய படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற திருச்சிற்றம்பலம் என்ற படத்தை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் என்றும் கூறப்படுகிறது.
 
அதேபோல் மோகன் ராஜா இயக்கும் அடுத்த படத்திலும் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இந்த படம் தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்