உனக்கு திமிர் அதிகம்... அடுத்தவங்களை மதிக்க தெரியாத நமீதா முதலில் எலிமினேட் ஆகணும்!

வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:41 IST)
பிக்பாஸ் வீட்டில் முதல் திருநங்கையாக நமீதா மாரிமுத்து சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். திருநங்கை மாடல் அழகியான நமீதா அழகி போட்டிகளால் கலந்துக்கொண்டு விருது வென்றுள்ளார். இவர்  நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
 
மிஸ் டிரான்ஸ் ஸ்டார் என்ற இன்டர்நேஷனல் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியாவின் திருநங்கை என்ற பெருமையை சம்பாதித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸில் கலந்துக்கொண்டுள்ள நமீதா ஒரு திருநங்கையாக முன்னேறுவதில் பலரும் அவருக்கு ஆதரவு கொடுத்தனர். 
 
நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு திருநங்கையாக தான் கடந்து வந்த பாதை குறித்து பேசி எல்லோரின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். ஆனால், அதற்குள் இன்று வெறுப்பை சம்பாதித்துவிட்டார். செல்வியிடம் சிடுசிடுவென நடந்துகொள்ளும் நமீதா மற்றவர்களுக்கு மரியாதையை கொடுப்பதில்லை திமிராக நடந்துக்கொள்கிறார். என ஆடியன்ஸ் அவர் மீது வெறுப்பை காட்டி வருகிறன்றனர். உன்னை இந்த சமூகம்  திருநங்கையாக இருப்பதால் வெறுத்து ஒதுக்கியிருக்காது உன்னுடைய திமிரும் ஆணவமும் தான் அடுத்தவர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பாய் என எல்லோரும் அவரை குறை கூறி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்