ஆன்லைனில் நிர்வாணப் படம் கேட்ட நபர்… மகளுக்கு நடந்த மோசமான சம்பவத்தைப் பகிர்ந்த அக்‌ஷய் குமார்!

vinoth

சனி, 4 அக்டோபர் 2025 (10:17 IST)
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். 2.0 படத்தில் நடித்ததின் மூலம் அவர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்த சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் “எனது மகள் ஆன்லைனில் வீடியோ கேம்கள் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த விளையாட்டில் அறிமுகமில்லாத நபர்களோடு சேர்ந்தும் விளையாடலாம். அப்படி ஒரு நபரோடு அவள் விளையாட அவர் ‘நீ சிறப்பாக விளையாடுகிறாய். வாழ்த்துகள்’ எனப் பாராட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் அவள் பெண் எனத் தெரிந்ததும் அவரின் பேச்சுத்தொனி மாறியுள்ளது.

அந்த நபர் என் மகளிடம் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்ப சொல்லிக் கேட்டுள்ளார். உடனே அவள் செல்ஃபோனை அணைத்துவிட்டு என் மனைவியிடம் இது பற்றி பேசியுள்ளார். என் மனைவியிடம் என் மகள் பேசியதுதான் சிறந்த விஷயம். இதுபோன்ற சைபர் குற்றங்களின் மூலம் பணம் பறிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தற்கொலைக் கூட செய்துகொள்கிறார்கள். மாணவர்களுக்குக் கணிதம், வரலாறு போல சைபர் கிரைம் பற்றியும் படிப்பிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்