நேரடியாக சன் நெக்ஸ்ட் தளத்தில் ரிலீஸாகும் அருள்நிதி- முத்தையா படம்!

vinoth

சனி, 4 அக்டோபர் 2025 (08:42 IST)
தென் தமிழ்நாட்டைக் கதைக்களமாகக் கொண்டு சர்ச்சைக்குரிய மசாலாக் கதைகளைப் படமாக்கி வந்தார் இயக்குனர் முத்தையா. அப்படி வரிசையாக கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த இயக்குனர் முத்தையா கடைசியாக இயக்கிய காதர் பாட்சா என்ற முத்து ராமலிங்கம் படம் படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து தனது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக்கி ஒரு ’சுள்ளான் சேது’ என்ற படத்தை இயக்கி முடித்தார். ஆனால் அந்த படத்தை இன்னும் ரிலீஸ் செய்யவில்லை. இதற்கிடையில் அவர் அருள் நிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

அந்த படத்தின் வேலைகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் அந்த படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் நெக்ஸ்ட் தளத்தில் அந்த படம் நேரடியாக வெளியாகவுள்ளது. குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ‘ரேம்போ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்