சுந்தர் . சி தயாரிப்பில் உருவாகும் ....'நாங்க ரொம்ப பிஸி' பட டிரைலர் ரிலீஸ்...

ஞாயிறு, 8 நவம்பர் 2020 (16:24 IST)
’மாயா பஜார் 2016’ என்ற படத்தில் தமிழ் ரீமேக்கான நாங்க ரொம்ப பிஸி படத்தில் டிரைலர் இன்று ரிலீசாகியுள்ளது.

கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் மாயா பஜார் 2016 . இப்படம் தமிழில்  நாங்க ரொம்ப பிஸி என்ற பெயரில் இயக்குநர் சுந்தர்.சி  ரீமேக்  செய்து வருகிறார்.

இப்படத்தை பத்ரி இயக்கிவரும் நிலையில், நடிகர்கள் ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின் , யோகி  பாபு, விடிவி கணேஷ் போன்றோர்  நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸான நிலையில் இன்று இப்படத்தின்   டிரைலர் ரிலீசாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்