விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் அவர் ஒரு படத்தை இயக்க உள்ளதால், அந்த படத்துக்கான வேலைகள் பாதிக்கப்படும் என்பதால், இப்போது தளபதி 67 படத்தில் இருந்து விலகிவிடலாம் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.