தளபதி 67 படத்தில் இருப்பதை உறுதிப்படுத்திய பிரபல நடிகை!

புதன், 2 நவம்பர் 2022 (15:11 IST)
இயக்குனர் லோகேஷ் இயக்க விஜய் நடிக்கும் தளபதி 67 படம் பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாக உள்ளது.

நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் வாரிசு திரைப்படம் இன்னும் சில தினங்களில் முழுவதும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது. இதை முடித்துவிட்டு அவர் உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை தொடங்க உள்ளார்.

தளபதி 67 என அழைக்கப்படும் இந்த படத்தில் விஜய்யுடன், விஷால் , இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தமிழில் கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை பூனம் பாஜ்வா நடிக்க உள்ளதாக அவரே டிவிட்டரில் அறிவித்துள்ளார். ஏற்கனவே த்ரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்