விஷால் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட வேணாம்… ஆனா நான்?- மிஷ்கின் எமோஷனல் பேச்சு!

vinoth

வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (11:18 IST)
சமீபகாலமாக நடிகர் விஷாலின் திரைவாழ்க்கையை அதிகளவில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அவர் நடிப்பில் சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ மற்றும் மத கஜ ராஜா ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. அதே போல அவர் உடல்நிலைக் குறித்தும் பொதுவெளியில் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அவர் நடிகை சாய் தன்ஷிகாவைத் திருமணம் செய்யவுள்ளர்.

தன்ஷிகா பேராண்மை, பரதேசி மற்றும் கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் அவர்கள் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஒரு காலத்தில் விஷாலுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவரும் துப்பறிவாளன் 2 படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனைகளால் விஷாலைக் கடுமையாகத் திட்டியவருமான மிஷ்கின் இந்த திருமணம் குறித்துப் பேசியுள்ளார். அதில் “விஷால் என் குழந்தை. அவன் திருமணம் செய்துகொள்ளப் போகும் பாப்பா எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க. விஷால், அவன் திருமணத்துக்கு என்னை அழைக்க வேண்டாம். நான் தள்ளியே நின்று கொள்கிறேன். ஆனால் அந்த இரவு அவனுக்காக நான் பிராத்தனை செய்வேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்