மாவீரன் படத்தி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்… மிஷ்கின் அளித்த பதில்!

புதன், 31 மே 2023 (15:53 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையைக் கணக்கில் வைத்து ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நாளில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் இப்போது ஜூலை 14 ஆம் தேதிக்கு முன் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் இயக்குனர் மிஷ்கின், தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். அதில் “இந்த படத்தில் முரட்டுத்தனமான வில்லனாக நடித்திருக்கிறேன். சிவகார்த்திகேயனுடன் மோதும் வில்லன் வேடம். அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக இருக்கும் வண்ணத்தில் படமாக்கியுள்ளார் இயக்குனர் மடோன் அஸ்வின்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்