அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மீராமிதுனை வரும் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.பின்னர் மீரா மிதுன் வாய்தவறிப் பேசிவிட்டதாகக் கூறி ஜாமீன் தாக்கல் செய்தால், ஆனால அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
பின்னர், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஜோ மைக்கேல் என்பவர் தொடந்துள்ள வழக்கில் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பிரபல நட்சத்திர விடுதியின் மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.