தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார். இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். அதில் அவர் நடித்த மைனா என்ற கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்ததால் மைனா நந்தினி என்றே அழைக்கப்படுகிறார்.
இதையடுத்து கடந்த ஆண்டு சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களின் மகிழ்ச்சியான இல்லறத்தின் அடையாளமாக மைனா கர்ப்பமானார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இப்போது மைனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ரசிகர்கள் மைனாவுக்கும் அவர் கணவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.