தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, கத்தி, அஞ்சான், தங்கமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான யசோதா படம் நல்ல வரவேற்பை பெற்றது. சாகுந்தலம் என்ற படம் கலவையாக விமர்சனங்களைப் பெற்றது. கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில் தற்போது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், குஷி பட ஷீட்டிங்கிற்காக துருக்கி சென்ற நிலையில், ஓட்டல் ஒன்றில் விஜய் தேவரகொண்டாவுடன் உணவு சாப்பிடும் புகைப்படத்தை சமந்தா தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார்.