பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’: ’எனக்கு மட்டும்’ பாடல் ரிலீஸ்
வியாழன், 16 ஜூன் 2022 (18:12 IST)
பிரபுதேவாவின் மை டியர் பூதம்: எனக்கு மட்டும் பாடல் ரிலீஸ்
பிரபுதேவா நடிப்பில் ராகவன் இயக்கத்தில் உருவான மைடியர் பூதம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளன
இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற எனக்கு மட்டும் ஏன் ஏன் என்ற பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
டி இமான் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் உருவான இந்த பாடலை நாகேஷ் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே இனிமையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.