முருகதாஸின் தமிழ் கஜினியில் நயன்தாரா நடித்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இணைந்து படம் செய்யவில்லை. இந்நிலையில், தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நயன்தாராவை அவர் அணுகியுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
அனாமிகா தெலுங்குப் படத்தின் புரமோஷனில் கலந்து கொள்ளாததால் நயன்தாராவுக்கு தெலுங்குப் படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில்தான் அவர் பாபு பங்காரம் படத்தின் மூலம் தெலுங்கில் ரீ என்ட்ரியானார். ஆனால், அந்தப் படத்தின் புரமோஷனிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.