இன்றுடன் முடிகிறது 'காலா'வின் முதல்கட்ட படப்பிடிப்பு

வியாழன், 29 ஜூன் 2017 (07:31 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி வந்த 'காலா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிகிறது. இதனையடுத்து நாளை படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளனர்.



 
 
ஏற்கனவே ரஜினியின் காட்சிகள் நேற்றுடன் முடிக்கப்பட்டதால் அவர் உடற்பரிசோதனைக்காக நேற்றே அமெரிக்கா சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தயாராகவுள்ள தாராவி செட்டில் இன்னும் ஒருசில நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.
 
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்