சீதாராமம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?... மிருனாள் தாக்கூர் அளித்த பதில்!

செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (15:27 IST)
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால், இப்போது அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகியுள்ளார். அதன் பின்னர் சமூகவலைதளங்களில் அவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

நானி மற்றும் மிருனாள் தாக்கூர் (சீதாராமம் புகழ்) இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக “நானி 30” என்ற படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்த படத்தை ஷௌரிவ் இயக்குகிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்காக மிருனாள் தாக்கூருக்கு சுமார் 6 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமூகவலைதளப் பக்கத்தில் ரசிகர்களோடு உரையாடிய மிருனாளிடம் “சீதாராமம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா?” என்ற கேள்வியை எழுப்பினார் ரசிகர் ஒருவர்.  அதற்கு பதிலளித்த மிருனாள் தாக்கூர் “எனக்கு அதுபற்றி தெரியவில்லை. ஆனால் அப்படி இரண்டாம் பாகம் உருவானால் அதில் நானும் இருக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்