மதுகை – பிராண்ட் அம்பாஸடர் நயன்தாரா!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (16:51 IST)
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் "மதுகை" என்ற திட்டத்தை சத்யபாமா பல்கலைகழகத்தின் பிராண்ட் அம்பாஸடர் நயன்தாரா மற்றும் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் தொடங்கி வைத்தனர்.

சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி 35-ம் ஆண்டு கலாச்சார விழா 2023-ல் கொண்டாடியது.  சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன், தலைவர் டாக்டர் மரிய ஜான்சன் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து தன் அன்பான வார்த்தைகளால் ஊக்கப்படுத்தினார். அதேபோல் துணைத் தலைவர்கள் திருமதி.மரியா பெர்னாட்டி தமிழரசி, திரு.ஜெ.அருள் செல்வன், செல்வி மரிய கேத்தரின் ஜெயப்பிரியா ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் திருமதி.நயன்தாராவை “சத்யபாமா பிராண்ட் அம்பாஸடர் 2023” என்று சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.மரியஜீனா ஜான்சன் சமீபத்தில் அறிவித்தார். சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தரின் சிந்தனையில் உருவான "மதுகை" (The Strength - தி ஸ்டெங்க்த்) என்ற திட்டத்தை திருமதி.நயன்தாரா தொடங்கி வைத்தார்.

சுகாதாரப் பொருட்கள் மற்றும் அதிக கலோரி சத்துக்கள் அடங்கிய தொகுப்புகளை விநியோகிப்பதன் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்த திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். 

முதற்கட்டமாக 15 அரசுப் பள்ளிகள் பல்கலைக்கழகத்தின் வேந்தரால் தத்தெடுக்கப்பட்ட 5 கிராமங்கள் இதனால் பயனடைகின்றன. 35 வருட சத்யபாமா பயணத்தை வழங்கும் ஒரு அசத்தலான "லேசர் ஷோ" அனைத்து மாணவர்களையும் ஊழியர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிகழ்ச்சியில் சத்தியபாமா கல்வி குழுமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றும் பணியாளர்களுக்கு சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன், தலைவர் டாக்டர் மரிய ஜான்சன் அவர்களால் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்