இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்துக்கு ஏழுகடல் ஏழுமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.