ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சியில் தவறு ஒன்றுமில்லை : பார்ச்சட் பட தயாரிப்பாளர்

வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (13:31 IST)
கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடித்த பார்ச்சட் என்ற படத்தில் இடம்பெற்ற படுக்கையறை காட்சி சமீபத்தில் இணையத்தில் வெளியானது.


 

 
இந்த விவகாரம் இந்தி மற்றும் தமிழ் சினிமா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த பார்ச்சட் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அசீம் பஜாஜ் கூறுகையில் “ராதிகா ஆப்தேவின் படுக்கையறை காட்சி எப்படி வெளியானது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. படத்தை விளம்பரப்படுத்த நோக்கத்திற்காக அப்படி செய்யப்படவில்லை. ஆனால் அதன் மூலம் நன்மை நடந்தால் ஏற்றுக்கொள்வேம்.
 
அந்த படம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வெளியாகிவிட்டது. எனவே அங்கிருந்து யாரோ ஒருவர்தான் இணையத்தில் இதை கசிய விட்டிருக்க வேண்டும். 
 
அந்த காட்சியில் தவறு எதுவும் இல்லை. அந்த காட்சி, பரபரப்போ அல்லது உணர்ச்சியை தூண்டும்  விதமாகவோ எடுக்கப்படவில்லை. நம் நாட்டில் ஆபாச சிடிக்கள் சுலபமாக கிடைக்கிறது. ஆனால் செக்ஸ் பற்றி பேசினால் தவறு என்கிறார்கள். எனவேதான், ராதிகா ஆப்தேவின் முன்னழகு தெளிவாக தெரியாதபடி படம் பிடித்தோம். 
 
ராதிகா ஆப்தே என் சகோதரி போன்றவர். எனவே அவரை ஒரு போதும் தவறாக சித்தரிக்க மாட்டோம். அது பார்ப்பவர்களின் பார்வையை பொருத்தது” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்