கார்கில் என்ற படத்தை இயக்கியவர் ஷிவானி செந்தில். அடுத்து இவர் இயக்கும் படம் டேக் டைவர்ஸன். இப்படம் 70ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பேரரசு, இந்த உலகில் எதையும் எதிர்பார்க்காத ஒரு உயிர் என்றால் அது தாய் தான். தாய்க்கு தன் பிள்ளையை நன்றாகப் பெற்றெடுத்தால் போதும் , அவர்கள் வெற்றி பெற வெண்டும் என எதிர்பார்ப்பார்கள். இப்படத்தின் ஹீரோ சிவக்குமார் பேசும்போது, தன் குருவுக்கு நன்றி தெரிவித்த பின் தன் தாய்க்கு நன்றி கூறினார்.அப்போதே அவர் கலைஞராகிவிட்டார்.
மேலும், சமீபகாலமான தமிழைக் காப்பாற்ற வேன்டும் என இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அழியாது, இப்படத்தின் நாயகிக்கு இலக்கிய பெயர்.அவர்கள் தமிழில் பேசுவதே அழகு, அழகான தமிழில் பேசினால் அதை விட அழகு, அழகான பெண்கள் தமிழில் பேசி தமிழைக் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.