அம்பேத்கர் சிலைக்கு மாலை! அரசியலில் நுழைந்த விஜய்? – நிர்வாகிகளுக்கு உத்தரவு!

வியாழன், 13 ஏப்ரல் 2023 (15:04 IST)
அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க நடிகர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடும் ஆர்வத்துடனும் இருந்து வருகிறார். விஜய் மக்கள் நற்பணி இயக்கம் மூலமாக மக்களுக்கு பல உதவிகளை செய்து வரும் நடிகர் விஜய், முன்னதாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை வேட்பாளர்களாய் நிறுத்தி சில தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒருபக்கம் தொடர்ந்து நடித்து வந்தாலும் மற்றொருபுறம் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை நடிகர் விஜய் தீவிரப்படுத்தி வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில்தான் நாளை அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய சொல்லியுள்ளாராம் நடிகர் விஜய்.

இதை கண்காணிக்க 10 நிர்வாகிகளை அவர் நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க விஜய் கூறியுள்ளது அரசியல் நகர்வுக்கான அறிகுறியாகவே கருதப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்