கோட் படத்தில் விஜயகாந்த் காட்சிகள் முதலில் எனக்குப் பிடிக்கவில்லை… இயக்குனர் மோகன் ஜி கருத்து!

vinoth

புதன், 18 செப்டம்பர் 2024 (13:45 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இதில் பல நடிகர்களின் கேமியோக்களை ஆங்காங்கே வைத்திருந்தார் வெங்கட்பிரபு. இதில் உச்சபட்சமாக கோட் படத்தில் விஜயகாந்த் ஏ ஐ மூலமாக திரும்பக் கொண்டுவரப்பட்டது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிய சர்ப்ரைஸாக அமைந்தது. படம் பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்த்து மகிழ்ந்தார்கள். ஆனால் இந்த காட்சிகள் சரியாக உருவாக்கப்படவில்லை. பார்ப்பதற்கு அது விஜயகாந்த் போலவே இல்லை என்றும் விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள திரௌபதி இயக்குனர் மோகன் ஜி “கோட் படத்தில் முதலில் விஜயகாந்த் காட்சிகள் எனக்குப் பிடிக்கவில்லை. பின்னர் விஜய் சார் பாடி லாங்குவேஜில் விஜயகாந்தை நினைத்துப் பார்க்கையில் பிடித்திருந்தது.  நான் அது மாதிரி யாரையாவது ஏ ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்க வேண்டும் என்றால் சிவாஜி சாரைதான் உருவாக்குவேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்