மீண்டும் இணையும் திரௌபதி கூட்டணி…!

vinoth

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (14:18 IST)
இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சர்ச்சையான திரைப்படங்களான திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார். கடைசியாக அவர் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது மோகன் ஜி தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார். தன்னுடைய திரௌபதி படத்தின் கதாநாயகனான ரிச்சர்ட்தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்துக்கான பூஜை நடந்துள்ளது. அது சம்மந்தமான புகைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி சமுகவலைதளத்தில் பகிர, அது வைரல் ஆகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்