நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் குறித்து விளக்கம் கேட்கப்படும்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

திங்கள், 10 அக்டோபர் 2022 (13:44 IST)
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகளுக்கு வாடகை குழந்தைகள் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படும் நிலையில் விதிமுறைப்படி இந்த குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் நேற்று தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகிவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார் 
 
திருமணமான 4 மாதத்தில் குழந்தை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என்றும் கூறப்பட்டது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது விதிமுறைப்படி நடந்ததா என விளக்கம் கேட்கப்படும் என்றும் இருவரிடம் விசாரணை செய்யப்படும் என்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்