தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்ரமாக அறிமுகமாகி பின்னர் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.
இதனிடையே மீனாவின் கணவருக்கு புறாவின் எச்சத்தால் ஏற்படும் சுவாசத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து பெறுவதாக மருத்துவமனை திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குத் தாமதம் ஆனதால், இப்படியே அவர் குணமாகலாம் என நினைத்தனர்.