நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த பட ஹீரோ யோகிபாபு

செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (20:29 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த திகில் படமான 'மாயா' படத்தை இயக்கியவர் அஸ்வின். இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படம் ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும் இந்த படத்தில் ஹீரோவாக யோகிபாபு நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. யோகிபாபு ஹீரோவாக நடிக்க மாட்டேன் என சமீபத்தில் கூறியிருந்தாலும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

ஒய்நாட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஹீரோ ஆசையால் காமெடி வாய்ப்புகளை இழந்த ஒருசில நடிகர்களை போல் இல்லாமல் யோகிபாபு காமெடியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது என்பதே அவருக்கு கூறும் அறிவுரையாக உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்