நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது மாஸ்டர் படம். இப்படத்திற்கு சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டில் மிகக்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய மாஸ்டர் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என மாஸ்டர் படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் எப்போது படம் ரிலீஸாகும் எனப் பெரும் கேள்விகள் ரசிகர்களிட,ம் எழுந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. குறிப்பாக இப்படம் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் பிரமாண்டமாக ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடும் விதமாக #MasterPongal என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் காலை முதல் டிரெண்டாகி வருகிறது. கொரோனாவால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 50%இருக்கைகளுடன் இயங்கி வரும் நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் திரையில் வெளியாகும் பெரிய ஸ்டாரின் படமாக இருக்கவுள்ளது.