ஹாட்ஸ்டாரில் வெளியானது மார்வெலின் இட்டர்னல்ஸ்! – ரசிகர்கள் உற்சாகம்!

புதன், 12 ஜனவரி 2022 (18:08 IST)
மார்வெலின் சூப்பர் ஹீரோ படமான இட்டர்னல்ஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டூடியோஸிற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக மார்வெல் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் ஷாங் சீ, இட்டர்னல்ஸ், ஸ்பைடர்மேன் என தொடர்ச்சியாக படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இட்டர்னல்ஸ் திரைப்படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹாயெக் உள்ளிட்ட முக்கியமான 7 கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளனர். தானோஸிடமிருந்து உலகத்தை காப்பாற்றிய பிறகு ஏற்படும் சிக்கல்களையும், மற்றுமொறு வில்லனையும் இட்டர்னல்ஸ் சேர்ந்து எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் கதை. இந்த படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்