சிம்பு நடிப்பில் உருவாகி சில நாட்கள் படப்பிடிப்புக்கு பின்னர் கைவிடப்பட்ட திரைப்படம் பத்து தல. அந்த படத்தை இப்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இந்த படம் கன்னடத்தில் வெளியான மப்டி படத்தின் ரீமேக் ஆகும். கன்னடத்தில் சிவராஜ் சிவக்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.
இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்க உள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் இப்போது கவிஞரும் திமுக பேச்சாளருமான மனுஷ்ய புத்திரன் நடிக்க உள்ளார். இதை உறுதிப் படுத்தியுள்ள இயக்குனர் கிருஷ்ணா மனுஷ்ய புத்திரன் சமூகப் போராளிக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மனுஷ்ய புத்திரன் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.