எனக்கும் பெண் குழந்தைகள் உள்ளனர்: ‘மன்மதலீலை’ கில்மா படமா? என்ற கேள்விக்கு வெங்கட்பிரபு பதில்!

செவ்வாய், 22 மார்ச் 2022 (17:06 IST)
மன்மதலீலை கில்மா படமா என்ற கேள்விக்கு எனக்கும் பெண் குழந்தைகள் உள்ளனர்,  கில்மா படங்களை நான் எடுக்க மாட்டேன் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இன்று ‘மன்மதலீலை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்த போது அதில் வெங்கட் பிரபு மேலும் கூறியதாவது:
 
என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை தான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று யோசித்த போது மணிவண்ணன் இந்த அருமையான கதை எழுதி கொடுத்தார். முதல் முறையாக அடுத்தவரின் கதையை இயக்கி உள்ளேன். மணிவண்ணன் நிச்சயமாக பெரிய இடத்திற்கு செல்வார்.   
 
மன்மத லீலை அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதையை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார். என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் 3 பேருடன் இப்படம் குறித்து விவாதித்தேன் அனைவரும் ஒகே கூறிவிட்டதால் படத்தை இயக்கினேன். இதுபோன்ற ஒரு படத்தை இயக்குவதற்கு எனக்கு இம்ரேஷனாக இருந்தவர் பாக்யராஜ் சார் தான். இந்த காலத்தில் இப்படி ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று எடுத்த படம் தான் மன்மத லீலை.   
 
ஒரு சாதாரண மனிதன் நான் வாழ்க்கையில் செய்யும் சிறிய தவறு அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை ஜாலியாக, காமெடியாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். இது அடல்ட் படம் தான் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்து இருக்காங்க. ஆனால் படத்தில் முகம் சுளிக்கும் அளவுக்கு விரசம் இருக்காது. 18 வயசுக்கு மேற்பட்ட அனைவரும் படத்தை பார்க்கலாம் 
 
இந்த படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு பலர் இது கில்மா படம் என்று கூறுகிறார்கள். ஆனால், இது அப்படிப்பட்ட படம் இல்ல, எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி’ என்று வெங்கட்பிரபு தெரிவித்தார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்