கேரளாவை விட தமிழ்நாட்டில் முன்பதிவு வசூல் அதிகம்… கலக்கும் மஞ்சும்மள் பாய்ஸ்!

சனி, 2 மார்ச் 2024 (13:49 IST)
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் பாடல் இடம்பெற்று ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் தருணமாக அமைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவை அழைத்து பாராட்டினார் கமல்ஹாசன். படத்துக்கு தமிழகத்தில் திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு தமிழகத்தில் இந்த படத்தின் முன்பதிவு தொகை 1.5 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் கேரளாவிலோ முன்பதிவு மூலமாக வந்த தொகை 1.1 கோடி ரூபாய் மட்டுமே.  இதை பிரபல ஆன்லைன் புக்கிங் நிறுவனமான புக் மை ஷோ அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்