அடுத்த தேர்தலில் பார்த்து கொள்ளலாம்.. ம.நீ.மவுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக?

Mahendran

சனி, 2 மார்ச் 2024 (09:40 IST)
திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெறும் என்றும் அந்த கட்சிக்கு கோவை தொகுதி மற்றும் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது முதல் கட்ட பேச்சு வார்த்தை கூட இன்னும் நடைபெறவில்லை என்பதால் திமுக கூட்டணியில் கமல் கட்சி இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினரை விசாரித்த போது ஏற்கனவே மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இரண்டு தொகுதிகள் தங்கள் கட்சி கேட்டதாகவும் ஆனால் ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் என்று கறாராக திமுக கூறிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அதே நேரத்தில் உதயசூரியன் சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்ததாகவும் அதற்கு கமல்ஹாசன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஒரு கட்சியின் தலைவரே இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் மக்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கமல் கருதுவதாகவும் கூறியுள்ளனர்.

எனவே இந்த தேர்தலில் போட்டி இல்லை என்று முடிவெடுத்துள்ள கமல்ஹாசன் ராஜ்யசபா தொகுதி மட்டும் ஒதுக்கி கொடுங்கள் அதன் மூலம் நான் பாராளுமன்றம் செல்கிறேன் என்று கூறியதாகவும் அதற்கும் திமுக ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஒரு தொகுதி தான் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் போட்டியிடுங்கள், இல்லையேல் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என திமுக சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் நீதி மய்யம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்