என்னோட இணைந்து பணியாற்ற பெரிய ஹீரோஸ் விரும்புறது இல்ல… முன்னணி இசையமைப்பாளர் புலம்பல்!

vinoth

சனி, 6 ஜனவரி 2024 (09:11 IST)
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் மணிசர்மா.  சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய், அ‌ஜித், விஷால் மற்றும் தெலுங்கு முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார்.

ஆனால் இப்போது அவருக்கு பெரிதாக படங்கள் இல்லை. தெலுங்கு சினிமாவில் இப்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் பெரும்பாலும் இசையமைத்து வருகின்றனர்.

இதுபற்றி பேசியுள்ள மணிஷர்மா “முன்னணி ஹீரோக்கள் என்னோடு இணைந்து பணியாற்ற தயாராக இல்லை. எல்லா பட வாய்ப்புகளும் எனக்கே வேணும்னு நான் நினைக்கல. தமன், தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ரெண்டு படம் கொடுத்தா எனக்கு ஒரு படம் கொடுங்க” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்