“யூனிவர்ஸ்லாம் எனக்கு சரிவராது… அவருதான் அதுக்கு சரியான ஆளு…” இயக்குனர் மணிரத்னம் கருத்து!

vinoth

வெள்ளி, 30 மே 2025 (08:45 IST)
பல ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலமாக ஒரு கமர்ஷியல் வெற்றியை ருசித்தார் மணிரத்னம். அதன் பிறகு இப்போது அவர் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. பல்வேறு நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மணிரத்னம் பல சுவையான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்.

அப்படி ஒரு நேர்காணலில் “மணிரத்னம் யூனிவர்ஸ் படங்களை நாங்கள் எதிர்பார்க்கலாமா?” எனக் கேட்க “ஒரு படம் எடுப்பதற்கே கஷ்டமாக உள்ளது. அதுக்கெல்லாம் லோகேஷ்தான் சரிபட்டு வருவார்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்