சினிமாவிற்கு வரும் முன்பே திருமணம் செய்து வைத்தது ஏன்? மனம் திறந்த மம்முட்டி

வெள்ளி, 16 ஜூன் 2017 (18:12 IST)
சினிமாவிற்கு வரும் முன்பே துல்கர் சல்மானுக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.


 

 
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்முட்டி மகன் துல்கர் சல்மான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்துகொண்டார். தற்போது நடிக்க வரும் முன்பே திருமணம் செய்து வைத்தது குறித்து நடிகர் மம்முட்டி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
ஒரு மனிதனின் வாழ்க்கையில் உறுதியான நிலையை ஏற்படுத்துவது திருமணம். திருமணம் செய்து கொண்டால்தான் பொறுப்பு வரும், வாழ்க்கையில் முன்னேறத் தோன்றும். எனவேதான் நடிக்க வரும் முன்பே திருமணம் செய்து வைத்தோம். என் வழியை என் மகனும் பின்பற்றுகிறான் என்றார்.
 
சமீபத்தில் துல்கர் சல்மான் - அமல் சுபியா ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்