மலையாள சினிமா வசூலில் சாதனை படைக்கும் ‘2018’… 100 கோடி கிளப்பில் இணைந்தது!

செவ்வாய், 16 மே 2023 (13:48 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் மிகப்பெரிய அளவில் மழை பெய்து, வெள்ளத்தால் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு ஏராளமான பொருட்சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. அதை மையமாக வைத்து 2018 என்ற படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கினார். இதில் டோவினோ தாமஸ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர்.

மே 5 ஆம் தேதி ரிலீஸான இந்த படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ரிலீஸாகி 11 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை புலிமுருகன் மற்றும் லூசிபர் ஆகிய படங்களின் வசூல் சாதனையை தவிர மற்ற படங்களின் வசூல் சாதனை அனைத்தையும் முறியடித்து ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்