பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் மாளவிகா மோகனன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகமாகினார். அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக விக்ரம்மின் தங்கலான் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்துக்காகக் கடுமையாக உழைத்தும் படம் வணிக ரீதியாக வெற்றிப் பெறாததால் அவரின் உழைப்புக்குப் பலன் கிடைக்கவில்லை. தற்போது பிரபாஸின் ராஜாசாப் மற்றும் மோகன்லாலோடு ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் பெண் வெறுப்பை மேற்கொள்ளும் நடிகர்கள் பற்றிப் பேசியுள்ளார்.
அதில் “கேமராவுக்கு முன்னால் பெண்களை சமமாக நடத்துவதாக, மதிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பெண்னியவாதியாகக் காட்டிக்கொள்ளும் நடிகர்கள், உண்மையில் மிகவும் பிற்போக்குத் தனமான பெண் வெறுப்புக் கொண்டவராக இருக்கிறார்கள். இதை நான் நேரடியாகவேப் பார்த்திருக்கிறேன். அவர்கள் முகமூடியை சரியாக அணிந்து கொண்டு நல்ல பெயர் எடுத்துக் கொள்கிறார்கள். எதற்காக இந்த பாசாங்குத்தனம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.